ராமராயன் தன் வாழ்க்கையை சாதாரண அலுவலனாக கோல்கொண்டாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவன். ஆதலால் கோல்கொண்டாவின் அரசியல் விவகாரங்கள் அவனுக்கு ஓரளவு அத்துப்படி. இப்ராஹிம் கோல்கொண்டாவின் அரசனாகும்முன் தன்சகோதரனின் தொல்லையிலிருந்து தப்ப விஜயநகரை நாடினான். 1550ல் தன்சகோதரன் இறந்ததும் அரசனாக இப்ராஹிம்ற்கு உதவினான். தொடக்கத்தில் இருவரும் நண்பராக இருந்தாலும், ராமராயன் அகமது நகருக்கு எதிராக அடிக்கடி போரிட அழைத்ததை இப்ராஹிம் விரும்பவில்லை. தன்னலமே இருவருக்கும் பிரதானமாய் இருந்தது, தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தவைக்கும் யுக்தியை ராமராயன் கையாள நினைத்தான்.
விஜயநகரபேரரசின் தொடர்தாக்குதலில் மற்ற சுல்தான்களை விட அதிகம் பாதிப்படைவது இப்ராஹிம் குதுப்ஷாவும், ஹீசைன் நைஜம்ஷாவும்தான், இவர்கள் இருவருமே விஜயநகருக்கெதிராக வலுவான முஸ்லீம் கூட்டணி உருவாக காரணமானவர்கள்.
விஜயநகர் சீரழிய முக்கிய காரணங்கள்:
அகமதுநகர்,கோல்கொண்டா மீது படையெடுத்த விஜயநகரவீரர்கள், அங்குள்ள பெண்கள், முதியவர்கள், குழந்தைகளை கொன்றழித்தது மட்டுமின்றி, முஸ்லீம்களின் புனிதமான வழிபாட்டுதளங்களை நாசப்படுத்தினர், இது சுல்தான்களையும், பொதுமக்களையும் கொதிப்படையசெய்தது. இந்த நிகழ்வே பிற்காலத்திய தலைக்கோட்டை போருக்கும், அதன்பின் நடந்த கொடூரமான விஜயநகர பேரழிவிற்கும் காரணமாய் அமைந்தது.
பீஜப்பூர், அகமதுநகர் சுல்தான்கள் மணஉறவின் மூலம் தங்கள் நெருக்கத்தை அதிகப்படுத்தினர், அகமதுநகர் சுல்தானின் மகள் சாந்தபிபீயை அலிஅடில்ஷா மணந்துகொண்டார், அதன்மூலம் அவருக்கு கோலாப்பூர்கோட்டை சீதனமாய் கிடைத்தது, இப்ராஹிம்ஷாவும், பீடார் சுல்தானும் இத்திருமணநிகழ்வில் கலந்துகொண்டனர். சுல்தான்களின் ஒற்றுமையை ராமராயன் அறிந்திருக்கவில்லை.
சுல்தான்கள் தக்க தருணத்தை நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் பீஜப்பூர் சுல்தான் தூதுவனை அனுப்பி தன்னிடமிருந்து பிடித்த ராய்ச்சூர், முதுகல் கோட்டையை திருப்பிதருமாறு வேண்டுகோள் விடுத்தான். வழக்கம்போல் ராமராயன் தூதுவனை அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பினான்,
சுல்தான்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது 1564ம் ஆண்டு பீஜப்பூர் சமவெளியில் தன் படைகளை கூடும்படி அனைத்து சுல்தான்களும் உத்தரவிட்டனர்.
கிருஷ்ணாநதியின் வடகரையிலுள்ள ராட்சசி-தாங்கிடி என்ற இடத்தில் படைகள் முற்றுகையிட்டன.
ராமராயனுக்கு ஓர் அசட்டுதைரியம் 20 ஆண்டுகளுக்குமேல் போர்அனுபவம் கொண்ட தன்முன் இப்படைகள் என்ன செய்யுமென, நினைத்துவிட்டார். கிருஷ்ணாநதியின் தென்கரையிலிருந்து -இலங்கை வரை பரவியிருந்த தன்படையினை அழைத்தார் ராமராயர். இருதரப்பு படைகளும் சுமார் ஒரு மாதம் முற்றுகையிட்டு எதிர்த்தன. நைஜாம்ஷாவும், குதுப்ஷாவும் கடுமையான தோல்வியடைந்தனர். வலிமைமிக்க ராமராயனோடு சமாதனம் பேசுவதுபோல் முதலில் வந்தனர். அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்தது. மறுபறம் ராமராயனின் முக்கிய தளபதிகளான கிலானி சகோதரர்களிடமும் ரகசியமாய் பேசினர் சுல்தான்கள்.
வரலாற்றாசிரியர் பெரிஷ்டா தன் குறிப்பில் விஜயநகர பேரரசு அன்றைய போரில் ஒன்பது லட்சம் காலாட்படை, 45 ஆயிரம் குதிரைவீரர்கள், 2 ஆயிரம் யானைனைகளை ஈடுபடுத்தியதாக கூறுவார். கிருஷ்ணாநதியை கடக்க முடியாதவாறு முதலில் பின்வாங்கி, பின்னர் முன்னேறியது சுல்தான்படை, இதை எதிர்பார்க்காத ராமராயன் தானே களத்தில் இறங்கினார் ஜனவரி 23 செவ்வாய்க்கிழமை இரண்டு படைகளும் நேருக்குநேராய் சந்தித்தன. அகமது நகர் சுல்தானின் 600 பீரங்கிகள் களத்தில் இறங்கியது. அதில் முக்கியமானது Malik-e-maidan எனப்பட்ட பீரங்கி முக்கியமானது. இதனை மைதானத்தின் நாயகன் என அழைத்தனர்.ஏகப்பட்ட வீரர்களை இது காவு வாங்கியது.
கிலானி சகோதரர்களின் துரோகம் :
திடீரென ஒரு திருப்பமாய் கிலானிசகோதரர்களின் உத்தரவு வேறுமாதிரி வர, விஜயநகரப்படையிலிருந்த முஸ்லீம் வீரர்கள் தன் படையினரை கணிசமாய் வெட்டிவீழ்த்த ஆரம்பித்தனர். அதிர்ந்த ராமராயன் பல்லக்குத்தூக்கிகளின் துணையுடன் தானே களம்புகுந்தான். பல்லக்கிலிருந்தே நவரத்தினங்கள், பொற்காசுகளை வீரர்களை நோக்கி வீசினார், காசினை பொறுக்கிய வீரர்கள் வீறுகொண்டு எழுந்து தாக்கினர். அச்சமயம் காயமுற்ற யானை ஒன்று பல்லக்குநோக்கி பிளிறி வர, உயிருக்குபயந்த வீரர்கள்(?) பல்லக்கைவிட்டு ஓட்டம்பிடித்தனர்.
சுல்தான்கள் கைகளில் சிக்கினான் ராமராயன்.
அகமதுநகர சுல்தானிடம் கொண்டுசென்றனர்.
ஆத்திரத்தில் கீழேதள்ளினார் சுல்தான். தெய்வம் என்னை எது வேண்டுமானலும் செய்துகொள்ளட்டும் என அப்போது ராமராயன் கூறியதாய் பெரிஷ்டா கூறுகிறார். ஒரே வீச்சில் சுல்தான் தலையை அரிந்தான். முகமெங்கும் ரத்தக்களரியான தலையை ஓர் ஈட்டியில் குத்தி கூடாரத்திலிருந்து வெளியே கொண்டுவந்தார் சுல்தான்.
விஜயநகரை சுல்தான்கள் ஆறுமாதம் வைச்சி செஞ்சதை அடுத்து பார்ப்போம்.









