விஜயநகரத்தின் தோற்றம்:
ஹொய்சாள மன்னர் மூன்றாம் வீரவல்லாளனிடம் வேலை பார்த்தவர்கள் சங்கமன் என்பவரின் மகன்கள் ஹரிஹரன், புக்கரன், கம்பணன், மாரப்பன், முத்தப்பன் என்ற ஐவர்கள். 1343ம் ஆண்டு வீரவல்லாளன் போரில் தோற்று கண்ணணூர்-கொப்பம் எனுமிடத்தில் மதுரை சுல்தான் கியாத்-உதின் என்பவரால் சாட்டையால் அடிவாங்கி, உயிருடன் உடல்முழுவதும் தோலைஉரித்து, தோலுரிப்பதென்றால் உண்மையாகவே உரித்தகோழிபோல் ஆக்குவது. கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இக்கதை இன்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் வீரவல்லாளன் சிந்து என பாடப்பட்டு வருகிறது. இறக்கும்போது இவருக்கு 70 வயதிற்குமேல் இருக்கும். இவரது மகனுக்கு வாரிசின்மையால், வடக்கு எல்லையான ஹோஸ்பேட் பகுதியில் ஹரிஹரனை மகாமண்டலீஸ்வரனாய் நியமனம் செய்தார் என கருதப்படுகிறது. இரண்டாம்தம்பி புக்கன் அனந்தப்பூர் மாவட்டத்தில் ஆளுநராக்கப்படுகிறார். மூன்றாம் தம்பி மாரப்பன் கடம்பர்களிடமிருந்து கொங்கனியை கைப்பற்றுகிறார். சந்திரகுத்தி, ஷிமோகா பகுதிகளில் இவர் ஆட்சி நடைபெறுகிறது.
சுற்றிலும் மலைகள், துங்கப்பத்திரை நதியின் நீர்வளம், அங்குள்ள சுழல்கள், முதலைகள் இவற்றைத்தாண்டி படைகள் நுழைவது கடினம் என கருதி, தங்கள் சாம்ராஜ்யத்தின் தலைநகரை இன்றைய ஹம்பி என அழைக்கப்படும் பகுதியில் அமைத்தனர். இதற்கு முக்கிய காரணம் முகம்மதியர் ஆட்சி தென்னகத்தில் பரவவிடக்கூடாது என்ற எண்ணமே.
இவ்வம்சத்தில் ஹரிஹரர், புக்கருக்கு அடுத்து பலர் ஆண்டாலும், குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணதேவராயராவார்.
கிருஷ்ணதேவராயர்:
இவர் 1509-1530 வரை ஆண்டவர். இவரது சீர்மிகு ஆட்சி குறித்து நிறைய கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் பெரிஸ்டா, பாரோஸ், கூட்டா முதலிய வரலாற்றாசிரியர்களும் எடுத்துக்காட்டியுள்ளனர்.ஹம்பியிலுள்ள விருபாக்ஷர் கோவிலின் கல்வெட்டுப்படி தன் 22ம் வயதில் 1509ம் ஆண்டு, ஜீன் மாதம் பதவியேற்றது தெரிகிறது. பாமினி சுல்தான் பீஜப்பூர் சுல்தான்களிடம் அடிக்கடி போர் நிகழ்த்தி வென்றுள்ளார். அதிலும் இஸ்மேயில் அடில் அடிஷா எனும் சுல்தான் அடிக்கடி போரிட்டுள்ளார்.
தன் இறுதிகாலத்தில் தன் தம்பி அச்சுதராயரை முடிசூட்டுகிறார். இதன்காரணம் கிருஷ்ணதேவராயனின் மகனுக்கு ஒன்றரை வயது கூட நிரம்பாத குழந்தையாக இருந்ததே, இதனால் கிருஷ்ணதேவராயரின் மருமேகன் ராமராயர் குழந்தையை அரசனாக்கி தான் வழிநடத்த முன்வந்தார். இதனால் அச்சுதருக்கும், ராமராயருக்கும் உடன்பாடு தோன்றி அச்சுதர் அரசரானார். கிருஷ்ணதேவராயரின் சிறுகுழந்தை இறந்துவிட, அவரின் அண்ணன் மகனை அரசனாக்க முனைந்தார் ராமராயர்,அச்சமயம் அது ஈடேறவில்லை. 1542ல் அச்சுதர் இறக்க, ராமராயரின் ஆசியில் சதாசிவராயர் ஆட்சிலேறினார். பெயரளவில்தான் சதாசிவராயர் ஆட்சி, ஆனால் அதிகாரம் செலுத்தியதோ ராமராயர். இந்த ராமராயர் ஆட்சியில்தான் மிகப்பெரிய விஜயநகர சாம்ராஜ்யம் துரோகத்தால் வீழ்ந்தது, அவ்வரலாற்றை அடுத்து காண்போம்.



No comments:
Post a Comment